நல்லூர் உற்சவத்திற்காக 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கமராக்கள்
12 ஆவணி 2023 சனி 03:08 | பார்வைகள் : 9047
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 21 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது.
இந்நிலையில், ஆலய வளாகத்தில் இடம்பெறும் திருட்டுக்கள், வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக யாழ்ப்பாண மாநகர சபையினால் 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் தெரிவித்தார்.
நல்லூர் கந்தன் ஆலய திருவிழா முன்னேற்பாடுகள் தொடர்பான கூட்டம் ஒன்று யாழ்ப்பாண மாநகர சபையில் நேற்று காலை நடைபெற்றது.
இதன்போது, புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைகள் தீர்மானங்கள் தொடர்பிலும் பொது மக்களுக்கான அறிவுறுத்தல் தொடர்பிலும் மாநகர சபையின் ஆணையாளர் த.ஜெயசீலன் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan