உலகின் மிகப்பெரிய அனகோண்டா வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்!

28 பங்குனி 2024 வியாழன் 07:44 | பார்வைகள் : 7051
உலகின் மிகப்பெரிய பாம்பு என அறியப்படும் 26 அடி நீள அனகோண்டா கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த அனகோண்டா வேட்டைக்காரர்கள் குழுவால் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அமேசான் காடுகளின் பழங்குடியினரால் வழிநடத்தப்பட்ட 15 விலங்கியல் வல்லுநர்கள் கொண்ட சர்வதேச குழு, கடந்த பெப்ரவரியில் அமேசான் நதியின் துணை நதியில் இந்த மிகப்பெரிய அனகோண்டாவைக் கண்டுபிடித்தனர்.
இந்த பெண் அனகோண்டாவுக்கு ‘அன்னா ஜூலியா’ என்று பெயரிடப்பட்டது.
அனகோண்டாக்கள் உலகின் மிகப்பெரிய பாம்புகளாக கருதப்படுகின்றன. அதிலும் , ‘அன்னா ஜூலியா’ உலகின் மிகப்பெரிய அனகோண்டாவாகக் கருதப்பட்டது.
‘அன்னா ஜூலியா’ ஒரு வடக்கு பச்சை அனகோண்டா ஆகும், மேலும் வடக்கு பச்சை அனகோண்டாக்கள் அனகோண்டாவின் புதிய இனம் என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1