ஈரான் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக தடை விதித்த கனடா
26 சித்திரை 2024 வெள்ளி 14:13 | பார்வைகள் : 11923
ஈரான் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் மொஹமட் ரெஸா அஸ்டியானி உள்ளிட்ட சிலருக்கு எதிராக கனடா தடை விதித்துள்ளது.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதனை எதிர்த்து இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் இரண்டு நிறுவனங்கள் இரண்டு பாதுகாப்பு பிரதானிகள் மீது தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி இந்த தடை குறித்து அதிகாரபூர்வ அறிவித்தல் வெளியிட்டுள்ளார்.
கடந்த 13ம் திகதி ஈரானிய அரச படையினர் இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியிருந்தது.
சிரியாவில் அமைந்துள்ள ஈரானிய தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறியே, ஈரான் இந்த தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது.
இவ்வாறான ஓர் பின்னணியில் ஈரானிய பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டவர்கள் கனடாவிற்கள் பிரவேசிக்கவும், பொருளாதார ரீதியான தொடர்பு பேணவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan