குளிர்சாதனப் பெட்டியில் கடந்த 55 ஆண்டுகளாக பாதுக்கக்கப்பட்ட கேக்...!
25 சித்திரை 2024 வியாழன் 15:35 | பார்வைகள் : 5593
கனடாவில் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் 55 ஆண்டுகள் பழமையான கேக் ஒன்று தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
ரொச்செல் மார் (Rochelle Marr) என்பவர், தனது திருமண கேக்கை குளிர்சாதனப் பெட்டியில் கடந்த 55 ஆண்டுகளாக பேணிப் பாதுகாத்துள்ளார்.
50ம் திருமண ஆண்டு நிறைவில் இந்த கேக்கை எடுத்து பகிர வேண்டுமென திட்டமிட்டிருந்தார்.
எனினும், 50ம் ஆண்டில் கேக் விடயத்தை ரொச்சல் மார் மறந்து விட்டார்.
கடந்த ஜனவரி மாதம் குளிர்சாதனப் பெட்டியை ரொச்சலும் அவரது மகனும் சுத்தம் செய்துள்ளனர்.
இதன் போது குறித்த குளிர்சாதனப் பெட்டியில் 2018ம் வரையில் திறக்க வேண்டாம் என ஓர் பெட்டியில் குறிப்பிடப்பட்டிருந்தாக தெரிவித்துள்ளார்.
அதனை திறந்து பார்த்த போது தனது திருமண கேக்கே இவ்வாறு பேணப்பட்டிருந்தமை தெரியந்ததாக ரொச்செல் தெரிவிக்கின்றார்.
ரொச்செலின் கணவர் பிரயன் மார் கடந்த 2023ம் ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திருமண கேக் பல்வேறு குளிர்சாதனப் பெட்டிகளில் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது ஓர் புருட்கேக் எனவும் அது பழுதடையாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திருமண கேக் 1968ம் ஆண்டில் இந்தக் கேக் தயாரிக்கப்பட்டுள்ளது.
திருமணத்தின் போது சுவைத்த அதே சுவை இன்னமும் உண்டு என ரொச்சலின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan