Paristamil Navigation Paristamil advert login

மெற்றோ, RER சாரதிகளுக்கு €2,500 யூரோக்கள் வரை ஊக்கத்தொகை!

மெற்றோ, RER சாரதிகளுக்கு €2,500 யூரோக்கள் வரை ஊக்கத்தொகை!

25 சித்திரை 2024 வியாழன் 10:16 | பார்வைகள் : 14135


ஒலிம்பிக் போட்டிகளின் போது, மெற்றோ மற்றும் RER சாரதிகளுக்கு €2,500 யூரோக்கள் வரை ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

தொழிற்சங்கம் மற்றும் RATP தொடருந்து நிறுவனத்துக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.  நேற்று ஏப்ரல் 24 ஆம் திகதி புதன்கிழமை மாலை FO, CGT உள்ளிட்ட தொழிற்சங்கங்களுக்கும் RATP அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதன்முடிவில், சாரதிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. 

அதன்படி, ஜூலை 22 ஆம் திகதியில் இருந்து செப்டம்பர் 8 ஆம் திகதி வரையான நாட்களுக்குள் ஐந்து நாட்களுக்கும் குறைவான விடுமுறைகளை எடுப்பவர்களுக்கு €1,600 யூரோக்கள் ஊக்கத்தொகையும், விதிவிலக்கான ஊக்கத்தொகையாக €740 யூரோக்களில் இருந்து €1,014 யூரோக்கள் வரையும் பெறமுடியும்.

அதிகபட்சமாக சாரதி ஒருவர் €2,400 யூரோக்களை பெற முடியும் என இந்த பேச்சுவார்த்தையில் இணக்கம் கொண்டுவரப்பட்டது.

ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளின் போது போக்குவரத்து தடையோ அல்லது வேலைநிறுத்தமோ இடம்பெறுவதை தவிர்க்கும் முகமாக இந்த ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்