பிரெஞ்சு நகரமொன்றில் ஒரு யூரோ விலையில் வீடு - ஒரே ஒரு நிபந்தனை
24 சித்திரை 2024 புதன் 05:33 | பார்வைகள் : 5156
பிரெஞ்சு நகரமொன்றில், பெரிய வீடொன்று ஒரு யூரோவுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
அத்துடன், அந்த வீட்டை பழுதுபார்க்கும் செலவுக்கும் நகர நிர்வாகம் உதவி செய்ய உள்ளது.
பிரெஞ்சு நகரமான Saint-Amand-Montrondஇல் தான் அந்த வீடு அமைந்துள்ளது. இரண்டு படுக்கையறைகள், வரவேற்பறை, சமையலறை, கழிவறை மற்றும் ஒரு பெரிய குளியலறையுடன், ஒரு முற்றமும், பொருட்கள் போட்டுவைக்கும் சேமிப்பகம் ஒன்றும் அந்த வீட்டில் உள்ளன.
விடயம் என்னவென்றால், அந்த வீட்டில் 12ஆண்டுகளாக யாரும் வாழவில்லை. ஆகவே, அதை பழுதுபார்க்கவேண்டியிருக்கும். என்றாலும், பழுதுபார்க்கும் செலவுக்கும் நகர நிர்வாகம் உதவி செய்யும்.
ஒரு யூரோவுக்கு கிடைக்கும் இந்த வீட்டை வாங்க ஒரே ஒரு நிபந்தனைதான். அதாவது, கையில் பணம் இருக்கிறது, இந்த வீட்டை வாங்கிப்போடலாம் என எண்ணுவோருக்கு இந்த வீடு கிடையாது.
இந்த வீடுதான் தாங்கள் வாங்கும் முதல் வீடு, அதில் வாழ்வதற்காகத்தான் அந்த வீட்டை வாங்குகிறோம் என்பவர்களுக்கு மட்டுமே இந்த வீடு. அதாவது, ஏற்கனவே ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வீடுகள் இருந்து, இந்த வீட்டை வாங்க வருவோருக்கு இந்த வீடு கிடையாது.
இப்படி அந்த வீட்டை ஒரு யூரோவுக்கு விற்பனை செய்வதற்கான காரணம், அந்த நகரில் வெறும் 9,000 வீடுகள் மட்டுமே உள்ளனவாம்.
ஆகவே, புதிதாக மக்களை அங்கு குடியேற்ற, குறிப்பாக இலைய தலைமுறையினரை அந்த பகுதியில் வாழ அழைப்பதற்காகவே, அதாவது, மக்கள்தொகையை ஸ்திரப்படுத்துவதற்காகவே, அந்நகர அதிகாரிகள் அந்த வீட்டை ஒரு யூரோவுக்கு விற்பனை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan