Paristamil Navigation Paristamil advert login

A13 நெடுஞ்சாலையில் வெடிப்பு! - திருத்தப்பட்டது!!

A13 நெடுஞ்சாலையில் வெடிப்பு! - திருத்தப்பட்டது!!

22 சித்திரை 2024 திங்கள் 05:25 | பார்வைகள் : 9035


A13 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வெடிப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை திருத்தப்பட்டது. எவ்வாறாயினும் இன்று வீதி திறக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

(புகைப்படம் : வெடிப்பு ஏற்பட்டுள்ள A13 நெடுஞசாலை)

Saint-Cloud அருகே பாரிய வெடிப்பு ஏற்பட்டதை அடுத்து, A13 நெடுஞ்சாலையின் ஒரு பகுதி ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி முதல் வீதி மூடப்பட்டுள்ளமை அறிந்ததே. இந்நிலையில், நேற்று ஏப்ரல் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறித்த வீதி புரணமைக்கப்பட்டது. வீதியின் வெடிப்பு மூடப்பட்டது.

ஆனால் இன்று நாள் முழுவதும் வீதி கண்காணிக்கப்படும் எனவும், நாளை செவ்வாய்க்கிழமை வீதி மீள திறக்கப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்