Paristamil Navigation Paristamil advert login

ஐரோப்பிய நாடுகளுக்கான பயணப் பாதையை மாற்றிய ஸ்ரீலங்கன் விமான சேவை!

ஐரோப்பிய நாடுகளுக்கான பயணப் பாதையை மாற்றிய ஸ்ரீலங்கன் விமான சேவை!

21 சித்திரை 2024 ஞாயிறு 17:13 | பார்வைகள் : 6083


ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் போர் பதற்றம் காரணமாக முன்னெச்சரிக்கையாக ஸ்ரீலங்கன் விமான சேவை தமது விமானப் பயணப் பாதைகளை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன்படி, ஐரோப்பிய நாடுகளுக்கான விமான நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதுடன், லண்டன் செல்லும் பயணிகள் குறித்த நேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்தை வந்தடையுமாறு ஸ்ரீலங்கன் விமான சேவை கோரியுள்ளது.

அதற்கமைய, விமான பயணம் ஒரு மணிநேரத்துக்கு முன்னதாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

பயணப்பாதை மாற்றப்படுவதால் ஏற்படும் தாமதங்களால் பயணிகளுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் மேற்கொண்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்