பரிஸ் : பாலியல் வல்லுறவு! - பலசரக்கு பொருட்களை எடுத்துவர உதவியவர் தேடப்படுகிறார்!
16 சித்திரை 2024 செவ்வாய் 14:40 | பார்வைகள் : 11027
70 வயதுடைய பெண்மணி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரது வீட்டுக்கு பலசரக்கு பொருட்களை காவிச் செல்ல உதவிய நபர், தனிமையான சூழ்நிலையை பயன்படுத்தி அப்பெண்மணியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் ஏப்ரல் 14 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்மணி பலசரக்கு பொருட்களை காவிக்கொண்டு சிரமப்படுவதை பார்த்துவிட்டு, நபர் ஒருவர் அவருக்கு உதவ முன்வந்துள்ளார் . 11 ஆவது தளத்தில் இருக்கும் அவரது வீட்டுக்கு குறித்த பலசரக்கு பொருட்களை காவிக்குக்கொண்டு சென்ற அவர், அங்கு குறித்த பெண்மணி தனியாக வசிப்பதை அறிந்துகொண்டுள்ளார்.
பின்னர் அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். குறித்த நபர் ஒருமணிநேரத்துக்கும் மேலாக அவ்வீட்டில் இருந்துள்ளார்.
குறித்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதன் பின்னரே காவல்துறையினர் அழைக்கப்பட்டுள்ளனர். மேற்படி சம்பவம் தொடர்பில் 2 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan