Paristamil Navigation Paristamil advert login

"tickets-restaurant" மூலம் ஆண்டொன்றுக்கு 47 மில்லியன் யூரோக்களை இழக்கும் ஊழியர்கள்.

"tickets-restaurant" மூலம் ஆண்டொன்றுக்கு 47 மில்லியன் யூரோக்களை இழக்கும் ஊழியர்கள்.

15 சித்திரை 2024 திங்கள் 20:15 | பார்வைகள் : 13037


தம் தொழிலாளர்களின் உணவு தேவைக்காக அவர்களின் நிறுவனங்கள் வழங்குகின்ற  "tickets-restaurant" எனும் உணவக வவுச்சர்கள் ஒவ்வொரு ஆண்டும் பாவிக்கப்படாமலே 47 மில்லியன் பெறுமதியான உணவக வவுச்சர்கள் விரயம் செய்யப்படுவதாக வர்த்தகம், சுற்றுலா மற்றும் நுகர்வுக்குப் பொறுப்பான அமைச்சர் Olivia Grégoire தெரிவித்துள்ளார்.

மறதியால் உடைகளோடு சேர்த்து சலவை செய்வது, குப்பைத் தொட்டிகளில் வீசுவது, வைத்த இடத்தை மறப்பது, பல இடங்களில் கைவிட்டு செல்வது போன்ற கவனக் குறைவால் பெரும்பாலான "tickets-restaurant" கள் காலாவதியாகும் நிலை ஏற்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் இன்று தொழில்நுட்ப வடிவிலான உணவு வவுச்சர்கள் "tickets-restaurant" வருகை இந்த பெரும் தொகை இழப்பை கணிசமாக குறைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. 

ஆனால் புதிய தொழில்நுட்ப அட்டைகள் 25 யூரோக்கு மேல் நாள் ஒன்றுக்கு பாவிக்க முடியாமல் போவது. முன்பிருந்த பண இழப்பை விட மிக அதிகமான பண இழப்பை இது ஏற்படுத்தும் என்று  தெரிவித்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்