'தக்லைஃப்' படத்தில் இருந்து தொடர்ந்து விலகும் பிரபலங்கள் காரணம் என்ன?
13 சித்திரை 2024 சனி 08:09 | பார்வைகள் : 10935
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ படத்தில் ஏற்கனவே துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி விலகி விட்டதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இன்னொரு நடிகரும் விலகி இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமல்ஹாசன் படத்தில் அல்லது மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது பலருடைய கனவாக இருக்கும் நிலையில் இந்த இருவரும் இணையும் படத்தில் நடிப்பது என்பது மிகவும் அபூர்வமாக கிடைக்கும் வாய்ப்பு என்பது திரையுலகினர் அனைவரும் தெரிந்ததுதான். அந்த வகையில் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற துல்கர் சல்மான் மற்றும் ஜெயராம் ரவி ஆகிய இருவரும் அடுத்தடுத்து விலகியதாக கூறப்பட்ட நிலையில் அவர்களுக்கு பதிலாக சிம்பு மற்றும் அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் முடிந்ததும் ’தக்லைஃப்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படும் நிலையில் தற்போது திடீரென இந்த படத்தில் இருந்து நடிகர் சித்தார்த் விலகி உள்ளதாக கூறப்படுகிறது.
துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகிய இருவரும் தங்களுடைய கால்ஷீட்டை படக்குழுவினர் வீணாக்கியதாக குற்றச்சாட்டு தெரிவித்து விலகியதாக கூறப்பட்ட நிலையில் சித்தார்த்தும் அதே குற்றச்சாட்டை தான் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சித்தார்த் கேரக்டருக்கு மணிரத்னம் யாரை தேர்வு செய்வார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.கமல் - மணிரத்னம் படத்தில் அடுத்தடுத்து பிரபல நடிகர்கள் விலகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan