தாய்க்காக கோயில் கட்டிய விஜய்.!

10 சித்திரை 2024 புதன் 09:29 | பார்வைகள் : 9647
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘ GOAT ‘ படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதனிடையே சமீபத்தில் சாய் பாபா கோயிலில் நடிகர் விஜய் இருப்பது போன்ற புகைப்படம் வைரலானது.
தற்பொழுது, விஜய் அந்த சாய்பாபா கோயிலுக்கு சென்றதற்கும், வைரலான புகைப்படத்துக்கும் பின்னால் உள்ள உண்மையான காரணம் ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக, விஜய் சென்ற சாய் பாபா கோயில் சீரடி மற்றும் துபாயில் உள்ளது என கூறப்பட்டது.
ஆனால், அவர் சென்றது அந்த இடமும் இல்லையாம். அதாவது, அந்தக் கோயில் சென்னை கொரட்டூரில் 8 கிரவுண்ட் நிலத்தில், நடிகர் விஜய் கட்டியது எனத் தெரியவந்துள்ளது. ,
ஆம், ஷோபா தீவிர சாய் பாபா பக்தி கொண்டவர் என்பதால், அவரது ஆசைக்காக 8 கிரவுண்ட் நிலத்தில் விஜய் இந்தக் கோயிலை கட்டிக் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. எனவே, அவரது தாயின் விருப்பத்தை விஜய் நிறைவேற்றியதாக அவரது ரசிகர்கள் நெகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
அந்த சாய்பாபா கோவிலின் பிரதிஷ்டா விழா கடந்த பிப்ரவரி மாதம் நடந்ததாகவும், அந்த விழாவில் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. அது மட்டும் இலலாமல், விஜய்யும் இரவு நேரங்களில் அடிக்கடி ரகசியமாக அந்த கோவிலுக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது. இணையத்தில் வைரலாகி இந்த புகைப்படம் சமீபத்தில் எடுக்கப்பட்டதாக சொல்லப்டுறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1