ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. விவாகரத்துக்கு காரணம் என்ன?
8 சித்திரை 2024 திங்கள் 15:15 | பார்வைகள் : 21609
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, ஏற்கனவே பிரபல நடிகர் ஒருவரின் காதலில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் தனுஷ் உடன் நெருக்கம் காட்டி உள்ளார். இது குறித்த தகவல் மீடியாக்களில் கசிந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தே தனுஷின் தந்தைக்கு போன் போட்டு திருமணம் குறித்து பேசி, இவர்களின் காதலை திருமணம் வரை கொண்டு சென்றார்.
அதன்படி கடந்த 2004 ஆம் ஆண்டு, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் மிகவும் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது. இதில் பாலிவுட், கோலிவுட், டோலிவுட், திரை உலகை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டதோடு, தமிழகத்தைச் சேர்ந்த பல அரசியல் ஆளுமைகளும் இந்த திருமணத்திற்கு வந்து இருவரையும் வாழ்த்தி சென்றனர்.
மிகவும் சந்தோஷமாக துவங்கிய தனுஷ் - ஐஸ்வர்யா திருமண வாழ்க்கை, வெற்றிகரமாக சென்று கொண்டிருந்த நிலையில்... இருவருக்கும் யாத்ரா - லிங்கா என்கிற இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்தனர். இந்நிலையில் திருமணம் ஆகி 18 ஆண்டுகள் கழித்து தனுஷ் உடன் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக ஐஸ்வர்யா விவாகரத்து செய்யும் முடிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாக துவங்கியது.
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து விவகாரம், மீடியாக்களில் பற்றி எரிய துவங்கிய நிலையில் இருவருமே திடீரென தங்களுடைய சமூக வலைதளத்தில் விவாகரத்து பெற்று பிரிய உள்ள தகவலை அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர். விவாகரத்து குறித்து அறிவித்து இரண்டு வருடங்கள் ஆன பிறகும் இதுவரை, இருவருமே விவாகரத்துக்காக நீதி மன்றத்தை நாடவில்லை. வீட்டிலும், ரஜினிகாந்த் தரப்பிலும் மீண்டும் இருவரையும் சேர்த்து வைக்க முயற்சிகள் மேற்கொள்ள பட்டதாக கூறப்பட்டது. எனவே மீண்டும் இருவரும் இணைந்து வாழ்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதுகுறித்து பிரபல பத்திரிகையாளரும் உறுதி செய்தார்.
ஆனால் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா சென்னை குடும்ப நல நீதி மன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. மேலும் தனுஷ் விவாகரத்து வேண்டாம்... சேர்ந்து வாழலாம் என்கிற ஆசையில் எவ்வளவோ இறங்கி வந்த போதிலும், ஐஸ்வர்யா விவாகரத்து முடிவில் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது.
தனுஷை உருகி உருகி காதலித்து மட்டும் இன்றி, அவன் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஆணிவேராக இருந்தவர் என்றால் அது ஐஸ்வர்யா தான். ஐஸ்வர்யாவுக்கு, தனுஷ் மீது இப்படி கோவம் வர காரணம், சில நடிகைகளுடன் தனுஷ் காட்டிய நெருக்கம் என கூறப்படுகிறது. மற்ற விஷயங்களை அவர் சகித்து கொண்ட போதிலும், தனுஷ்... மீண்டும் மீண்டும் செய்த சில விஷயங்களே வெறுப்பாக மாறி விவாகரத்து வரை கொண்டு வந்துள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan