Paristamil Navigation Paristamil advert login

ஒரு மணி நேரத்தில்... 25 ஆயிரம் கோடியை இழந்த மார்க் ஜூக்கர்பெர்க்!

ஒரு மணி நேரத்தில்... 25 ஆயிரம் கோடியை இழந்த மார்க் ஜூக்கர்பெர்க்!

7 பங்குனி 2024 வியாழன் 09:21 | பார்வைகள் : 6390


உலகெங்கிலும் உள்ள இணையதள பயனர்களுக்கு கருத்து மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைதளமாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முன்னணியில் உள்ளது. 

தற்போது மெட்டா எனும் நிறுவனத்தின் கீழ் முகநூல், மற்றும் மற்றொரு பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் ஆகியவை இயங்கி வருகின்றன.

இவற்றை மார்க் ஜுக்கர்பர்க் நிர்வகித்து வருகிறார்.

நேற்றிரவு உலகெங்கும் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டு சமூக வலைதளங்களும் திடீரென செயலிழந்தன.

இதனால், அவற்றை பயன்படுத்தும் பயனர்கள், கருத்து பரிமாற்றம் மற்றும் புகைப்படம் மற்றும் காணொளி பதிவேற்றம் உள்ளிட்ட அதன் அனைத்து சேவைகளையும் பெற முடியாமல் தவித்தனர்.

இரு சமூக வலைதளங்களும் முடங்கியதால் இதனால் மெட்டா நிறுவன அதிபர் மார்க் ஜுக்கர்பர்க் ரூ.25 ஆயிரம் கோடி (3 பில்லியன்) இழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்