சஞ்சய் முதல் படத்தின் நாயகன் இவரா?

5 பங்குனி 2024 செவ்வாய் 13:49 | பார்வைகள் : 7846
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, கவின் உட்பட சிலர் நாயகனாக நடிப்பார்கள் என்று கூறப்பட்டாலும் இதுவரை நாயகன் யார் என்பதை ஜேசன் சஞ்சய் முடிவு செய்யவில்லை என்றும் ஒரு சில நடிகர்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது வந்துள்ள தகவல் படி ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் துருவ் விக்ரம் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. துருவ் விக்ரம் ஏற்கனவே இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கத்திலும் இணைந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1