அடுக்கு மாடி ஜன்னலில் இருந்து கீழே விழுந்த குழந்தை நிலை....
7 ஆவணி 2023 திங்கள் 09:16 | பார்வைகள் : 11710
பிரித்தானியாவின் பர்ன்லி(Burnley) பகுதியில் உள்ள கட்டிடத்தின் இரண்டாவது மாடி ஜன்னலில் இருந்து ஆண் குழந்தை ஒன்று கீழே விழுந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கீழே விழுந்த குழந்தைக்கு 1 வயது ஆகும்.
இந்த விபத்து சம்பவத்தால் பலத்த காயங்களுடன் குழந்தை உயிர் தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனால் குழந்தை உடனடியாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் ராயல் மான்செஸ்டர் குழந்தைகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குழந்தை எவ்வாறு இரண்டாவது மாடி ஜன்னலில் இருந்து கீழே விழுந்தது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
அத்துடன் ஹிப் சாலையில்(Heap Street) உள்ள வீட்டிற்கு வெளியே ஏற்பட்ட இந்த சம்பவத்தில் குழந்தைக்கு உதவிய மக்களை சந்தித்து அவர்களிடம் இது குறித்து விவரங்களை சேகரிக்க உற்று நோக்கி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திடம் தங்களது எண்ணங்கள் இருப்பதாக DI மார்க் சாண்டர்ஸ் தெரிவித்துள்ளனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan