இலங்கையில் மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைப்பு!
4 பங்குனி 2024 திங்கள் 13:23 | பார்வைகள் : 13946
இலங்கையில் மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்ணான்டோ இதனை தெரிவித்தார்.
அதன்படி, 30 அலகுகளுக்கும் குறைவான மின் பாவனையாளர்களுக்கு தற்போது அறவிடப்படும் 12 ரூபா, 8 ரூபாவாக குறைக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, 33.3 சதவீதத்தால் அது குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அதேபோல், 31 முதல் 60 அலகு வரையான மின் பாவனையாளர்களுக்கு 28 சதவீதம் மின் கட்டணம் குறைக்கப்படவுள்ளது.
மேலும், 60 முதல் 90 அலகு வரையிலான மின் பாவனையாளர்களுக்கு 30 சதவீதம் மின் கட்டணம் குறைக்கப்படவுள்ளது.
அதேபோல், 90 முதல் 180 வரையிலான பாவனையாளர்களுக்கு 24 சதவீதம் மின் கட்டணம் குறைக்கப்படவுள்ள நிலையில், மத ஸ்தானங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு 33 சதவீதத்தாலும்,
ஹோட்டல்கள் மற்றும் தொழிற்துறைகளுக்கு 18 சதவீதத்தாலும் மற்றும்
பொது நோக்கத்திற்கான மின் பாவனைக்கு 23 சதவீதத்தாலும் மின் கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan