Paristamil Navigation Paristamil advert login

தக் லைஃப் படத்தில் இணையும் ஜெயம் ரவி!

தக் லைஃப் படத்தில் இணையும் ஜெயம் ரவி!

1 பங்குனி 2024 வெள்ளி 15:38 | பார்வைகள் : 8220


கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாக உள்ள கமல் 234 பட டைட்டில் 'தக் லைஃப்'  என்று சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்போடு படத்தின் ப்ரமோஷன் வீடியோவை கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட அது வைரல் ஹிட்டானது.

இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இப்போது இந்த படத்தில் மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் மற்றும் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செர்பியாவில் சில காட்சிகளை படமாக்கி சென்னை திரும்பியுள்ளது படக்குழு. இங்கு மூன்று செட்களை அமைத்து விறுவிறுவென அடுத்து ஷூட்டிங்கை நடத்த உள்ளாராம். இந்நிலையில் இன்று முதல் தக் லைஃப் ஷூட்டிங்கில் ஜெயம் ரவி இணைய உள்ளாராம். தேர்தல் வரை கமல்ஹாசனை வைத்து வெளியூரில் ஷூட் செய்ய முடியாது என்பதால் சென்னையிலேயே விறுவிறுப்பாக ஷூட்டிங் நடக்க உள்ளதாம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்