அ.தி.மு.க., -தே.மு.தி.க., கூட்டணி உறுதி: விரைவில் குழு அமைப்பு: வேலுமணி

1 பங்குனி 2024 வெள்ளி 15:13 | பார்வைகள் : 9236
அ.தி.மு.க., தே.மு.தி.க., கூட்டணி பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டதாக முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது லோக்சபா தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க., தே.மு.தி.க.,வுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. தே.மு.தி.க பொது செயலாளர் பிரேமலதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்.அ.தி.மு.க. சார்பில் வேலுமணி , அன்பழகன், பெஞ்சமின் ஆகியோரும் தே.மு.தி.க, சார்பில் பிரேமலதா, சுதீஷ் பார்த்தசாரதி ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அ.தி.மு.க., தே.மு.தி.க., கூட்டணி பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது. குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்திய பின் கூட்டணி குறித்து தெரிய வரும். <br><br>இரு தரப்பிலும் குழு அமைக்கப்பட்ட பின் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். அடுத்த இரண்டு மூன்று தினங்களில் இரு தரப்பிலும் குழு அமைத்து தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1