சாந்தனின் உடல் குடும்பத்தினரிடம் கையளிப்பு
1 பங்குனி 2024 வெள்ளி 12:58 | பார்வைகள் : 9292
சாந்தனின் உடல் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.
சென்னையிலிருந்து விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ள சாந்தனின் உடலை கொழும்பில் உள்ள மலர்ச்சாலை ஒன்றில் வைக்க ஒழுங்குகள் செய்யப்பட்டதன் பின்னர், யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்படும் என சாந்தனின் குடும்பத்தார் தெரிவித்தனர்.
சாந்தனின் உடல் அவரது மைத்துனர் உள்ளிட்ட குழும்பத்தினர் பொறுப்பேற்றனர். சாந்தனின் உடலைக் கையளிப்பதற்கு சட்டவாளர் புகழேந்தி சென்னையிலிருந்து அதே விமானத்தில் கொழும்பை வந்தடைந்தார்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உடுப்பிட்டியில் உள்ள சாந்தனின் வீட்டுக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படவுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன,






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan