இலங்கையில் மனைவியை எரித்து கொன்ற கணவன்?

24 மாசி 2024 சனி 13:00 | பார்வைகள் : 11769
ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிவல்கலையில் நேற்று (23) இரவு வீடு ஒன்றிற்குள் பெண் ஒருவர் எரிந்து உயிரிழந்துள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிரிவல்கலை பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் தனது கணவருடன் தென்னை மரக்கிளைகளால் ஆன சிறிய வீட்டில் வசித்து வந்துள்ளதுடன், வீடு தீப்பிடித்தமைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை.
உயிரிழந்த பெண்ணின் கணவர் ஆராச்சிக்கட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்னை மரக்கிள் தீப்பற்றி எரிந்த போது கணவன் வேகமாக வெளியே குதித்து உயிரை காப்பாற்றியதாக பொலிஸாரின் விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1