நீரிழிவு, கருத்தடை சிகிச்சைகளுக்கு இலவசமாக வழங்கும் கனடா

24 மாசி 2024 சனி 09:11 | பார்வைகள் : 8840
கனடாவில் ஆளும் லிபரல் கட்சியும் புதிய ஜனநாயக கட்சியும் இணைந்து முக்கிய ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளனர்.
மருத்துவ அட்டையை பயன்படுத்தும் ஒவ்வொரு கனேடிய பிரஜையும் நீரிழிவு மற்றும் கருத்தடை சிகிச்சையை இனி இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
குறித்த தகவலை வெள்ளிக்கிழமை புதிய ஜனநாயக கட்சி உறுதி செய்துள்ளது.
தேசிய மருத்துவத் திட்டத்தின் முதல் பாகத்தில் புதிய இந்த திட்டமானது சேர்க்கப்பட உள்ளது.
எதிர்வரும் வாரத்தில் சட்டமாக்கப்படும் என்றே கூறப்படுகிறது.
மார்ச் 1 ஆம் திகதிக்குள் தாம் முன்வைக்கும் கோரிக்கையை ஏற்க மறுத்தால், ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக NDP தலைவர் Jagmeet Singh எச்சரிக்கை விடுத்திருந்தார்.
தற்போது புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகவும், சில இறுதி விவரங்கள் வார இறுதியில் இறுதி செய்யப்படலாம் என்றும் NDP தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் ஊடாக Type 1-2 நீரிழிவுக்கான இன்சுலின் வழங்கப்பட உள்ளது.
அத்துடன், கூடுதல் நீரிழிவு மருந்துகளும் சர்க்கரை அளவை கண்காணிக்கும் கருவிகளுக்கான நிதியும் ஒதுக்கப்பட உள்ளது.
ஆனால் நீரிழிவுக்கான புதிய மருந்தாக அறியப்படும் Ozempic இந்த ஒப்பந்தத்தில் இணைக்கப்படவில்லை.
மட்டுமின்றி, கருத்தடை சிகிச்சைகளும் இனி இலவசம் என்றே கூறப்படுகிறது.
ஒன்ராறியோவில் தனியார் காப்பீட்டு வசதி இல்லாத 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கருத்தடை மருந்துகள் வழங்கப்படுகிறது.
Manitoba அரசாங்கமும் உறுதி செய்துள்ளது.
கருத்தடை சிகிச்சை இனி இலவசம் என்பது மில்லியன் கணக்கான பெண்களுக்கு உதவியாக இருக்கும் என்று NDP தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1