கமல்ஹாசனின் 'சத்யா' ரீமேக் ஆகிறதா?
26 பங்குனி 2024 செவ்வாய் 15:20 | பார்வைகள் : 7303
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், இசை ஞானி இளையராஜா இசையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘சத்யா’. இந்த படம் கடந்த 1988 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்பே இந்த படம் 8 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன் ஜோடியாக அமலா நடித்த இந்த படத்தில் கிட்டி வில்லனாக நடித்திருப்பார் என்பதும் இந்த படம் இன்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் கூட முழுவதும் பார்க்கும் வகையில் விறுவிறுப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு அப்பாவி இளைஞனை ஒரு நயவஞ்சக அரசியல்வாதி எப்படி தனது சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார் என்பதும் அந்த இளைஞனுக்கு அவரது சதி புரிய வந்ததும் கொதித்து எழுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருந்தது.
இந்த படத்தில் கமல்ஹாசனின் கெட்டப் முன்னாள் மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விவியன் ரிச்சர்ட் கெட்டப் போல் இருந்தது என்பதும் அந்த காலத்தில் இந்த கெட்டப் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பல சாதனைகள் செய்த ’சத்யா’ திரைப்படம் தற்போது ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும் ’போர்த்தொழில்’ படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா தான் இந்த படத்தை இயக்கப் போவதாகவும் கூறப்படுகிறது, மேலும் இந்த படத்தில் கமல்ஹாசன் நடித்த கேரக்டரில் அசோக் செல்வன் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan