கட்டுநாயக்க விமான நிலையத்தில் வௌிநாட்டு பிரஜை கைது

23 பங்குனி 2024 சனி 15:38 | பார்வைகள் : 13975
கொக்கேய்ன் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் 12 மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (23) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே அவர் கைதாகியுள்ளார்.
சந்தேகநபர் பிரேசிலில் இருந்து டுபாய் ஊடாக இன்று காலை கட்டுநாயக்க விமான நிலைத்ததை வந்தடைந்துள்ளார்.
இவர் வெனிசுலாவைச் சேர்ந்த 41 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
அவரிடம் இருந்து 132 கிராம் எடையுடைய 12 மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1