வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்

22 பங்குனி 2024 வெள்ளி 10:57 | பார்வைகள் : 7781
வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, தோணிக்கல் ஆலடி வீதியில் உள்ள பலசரக்கு வியாபார நிலையம் ஒன்றில் இருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான இரண்டு பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய ரங்கசாமி நேசரத்தினம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
தனது குடும்பத்தை பிரிந்து தாயாருடன் வசித்து வந்ததுடன், இவ் வியாபார நிலையத்திலேயே தங்கி இருந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1