Paristamil Navigation Paristamil advert login

Essonne : 372 கிலோ கொக்கைன் போதைப்பொருள் மீட்பு! - மூவர் கைது!

Essonne : 372 கிலோ கொக்கைன் போதைப்பொருள் மீட்பு! - மூவர் கைது!

22 பங்குனி 2024 வெள்ளி 09:00 | பார்வைகள் : 10080


காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் நேற்று வியாழக்கிழமை La Ville-du-Bois (Essonne) நகரில் 372 கிலோ கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அங்குள்ள வணிக வளாகம் ஒன்றில் வைத்து இருவரும், அதன் வாகன தரிப்பிடத்தில் காத்திருந்த ஒருவரும் என மொத்தம் மூவர் கைது செய்யப்பட்டுள்லனர். அவர்களிடம் இருந்து பல மில்லியன் மதிப்புள்ள 372 கிலோ கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

வாகனத்துக்குள் கொக்கைன் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும், அதனை கைமாற்றுவதற்கு தயாராக இருந்த நிலையில் அவற்றை கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்கள் அடுத்த 96 மணிநேரத்து தடுத்துவைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய ஆண்டுகளில் Essonne மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட அதிகூடிய அளவிலான போதைப்பொருள் மீட்பு இதுவாகும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்