இலங்கையில் 3,000 லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருட்டு!
21 பங்குனி 2024 வியாழன் 15:32 | பார்வைகள் : 7519
புறக்கோட்டை , செட்டியார் தெரு பகுதியில் நகை விற்பனை நிலையமொன்றை நடத்திச்செல்லும் வர்த்தகர் ஒருவரின் 3,000 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் நேற்று (20) தெரிவித்துள்ளனர்.
கொழும்பு செட்டியார் தெரு , மட்டக்களப்பு, காத்தான்குடி ஆகிய பகுதிகளில் நகை விற்பனை நிலையங்களை நடத்திச் செல்லும் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த அஹமது முஹய்தீன் உமர் ஹசீம் என்ற வர்த்தகர் ஒருவரின் நகைகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் கொழும்பு மேலதிக நீதிவான் பசன் அமரசிங்கவிடம் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவரின் நகை விற்பனை நிலையமொன்றில் பணிபுரியும் இருவரே திருடியுள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan