குழந்தை அழுவதை நிறத்துவதற்கு பாட்டிலில் மதுபானம் வழங்கிய பெண்
.jpg)
10 ஆவணி 2023 வியாழன் 06:46 | பார்வைகள் : 13753
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சான் பெர்னார்டினோ கவுண்டியை சேர்ந்த ஹொனெஸ்டி டி லா டோரே(Honesti De La Torre, 37) என்ற பெண் ஒருவர் குழந்தை அழுவதை நிறத்துவதற்கு
பாட்டிலில் மதுபானம் ஊற்றி கொடுத்துள்ளார்.
அதகால் குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக சான் பெர்னார்டினோ கவுண்டி காவல்துறை அலுவலகம் தெரிவித்துள்ள தகவலில் அடிப்படையில்
சம்பந்தப்பட்ட பெண் ரியால்டோ(Rialto) வழியாக காரில் சென்று கொண்டிருந்த போது குழந்தை விடாமல் அழுவதை நிறுத்துவதற்காக பாட்டிலில் ஆல்கஹால் நிரப்பி கொடுத்துள்ளார்.
இதனையடுத்து குழந்தை உடல்நல குறைவு ஏற்பட்டு இருப்பதை அறிந்து உடனடியாக மருத்துவமனையில் ஹொனெஸ்டி டி லா டோரே அனுமதித்துள்ளார்.
குழந்தையின் உடலில் நச்சுத்தன்மை ஏறி இருப்பதை மருத்துவர் கண்டுப்பிடித்தனர்.
இந்நிலையில் குழந்தைக்கு மதுபானம் கொடுத்த குற்றத்திற்காக ஹொனெஸ்டி டி லா டோரே சனிக்கிழமை ரியால்டோ-வில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவரது வழக்கு செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் தற்போது குழந்தையின் உடல்நிலை குறித்த எத்தகைய தகவலும் தெரிய வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் குழந்தையின் பெற்றோர் தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1