பல டன் தங்கம் வைரமுடன் மூழ்கிய கப்பல்... 300 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு
21 பங்குனி 2024 வியாழன் 09:03 | பார்வைகள் : 7025
கரீபியன் கடற்பகுதியில் 300 ஆண்டுகளாக மூழ்கியுள்ள உலகின் மிகவும் மதிப்புமிக்க புதையலை நிபுணர்கள் குழு மிக விரைவில் வெளியே எடுக்க உள்ளனர்.
ஸ்பானிய கப்பலான San Jose டன் கணக்கிலான தங்கம், வெள்ளி, மரகதங்களுடன் புறப்பட்ட நிலையில், 1708ல் பிரித்தானிய போர் கப்பலால் மூழ்கடிக்கப்பட்டது.
குறித்த கப்பலில் குவிந்துகிடக்கும் புதையலின் தற்போதைய மதிப்பு சுமார் 17 பில்லியன் அமெரிக்க டொலர் (இந்திய மதிப்பில் ரூ 14,12,87,85,00,000) என்றே கூறப்படுகிறது.
தற்போது கொலம்பியாவில் உள்ள நிபுணர்கள் தரப்பு அந்த கப்பலில் இருந்து முதல் தொகுப்பை இன்னும் சில நாட்களில் மீட்டெடுக்க உள்ளனர்.
கடந்த 2015ல் தான் தொடர்புடைய கப்பலை நிபுணர்கள் தரப்பு கண்டு பிடித்துள்ளதுடன், அது 2,000 அடி ஆழத்தில் காணப்படுவதாகவும் உறுதி செய்தனர்.
ஆனால் அந்த எதிர்பாராத புதையலுக்கு தற்போது ஸ்பெயின், கொலம்பியா, பொலிவியா மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் சொந்தம் கொண்டாடுகின்றன.
இந்நிலையில், புதையலை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் சண்டை வேண்டாம் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை வெளியான தரவுகள் அடிப்படையில், 1708ல் பெரும் புதையலுடன் San Jose கப்பலும் 14 வணிக கப்பல்களும் 3 ஸ்பானிய போர்கப்பல்களும் பனாமாவில் இருந்து புறப்பட்ட நிலையில், Barú பகுதி அருகே பிரித்தானிய போர் கப்பலை எதிர்கொண்டுள்ளது.
இதில் San Jose என்ற கப்பல் கடலில் மூழ்கியது. 600 பேர்கள் பயணித்த அந்த கப்பலில் இருந்து வெறும் 11 பேர்கள் மட்டும் தப்பினர்.
2015 வரையில் அந்த கப்பல் மூழ்கிய இடம் மர்மமாகவே இருந்து வந்தது.
ஆனால் கொலம்பிய அரசாங்கமே, தங்கள் நிபுணர்கள் குழு குறித்த கப்பலை அடையாளம் கண்டுள்ளதாக அறிவித்தனர்.
தற்போது ஏப்ரல் மாதத்தில் அந்த 200 டன் புதையலின் ஒருபகுதியை மீட்டுவர நிபுணர்கள் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan