Paristamil Navigation Paristamil advert login

Montreuil, Clichy-sous-Bois, Sevran, Noisy-le-Sec - இரண்டாவது நாளாக மீண்டும் வன்முறை!

Montreuil, Clichy-sous-Bois, Sevran, Noisy-le-Sec - இரண்டாவது நாளாக மீண்டும் வன்முறை!

19 பங்குனி 2024 செவ்வாய் 17:40 | பார்வைகள் : 14197


Montreuil, Clichy-sous-Bois, Sevran மற்றும் Noisy-le-Sec போன்ற பரிசின் புறநகரங்களில் இரண்டாவது நாளாக நேற்று பரிசில் புறநகரங்களில் வன்முறைகள் பதிவானது. 

மார்ச் 18 - 19 ஆம் திகதிகளுக்கு உட்பட்ட இரவில் நள்ளிரவின் போது வீதிகளுக்கு இறங்கிய வன்முறையாளர்கள், பொதுச்சொத்துக்களை சேதமாக்கினர். குப்பைத் தொட்டிகளை எரியூட்டினர். Clichy-sous-Bois பகுதியில் இரவுநேர பேருந்து ஒன்று தாக்குதலுக்கு இலக்கானது.

rue Jean Moulin வீதியில் பெரும் வன்முறை வெறியாட்டம் இடம்பெற்றது. 

காவல்துறையினர் மகிழுந்துடன் மோதி கொல்லப்பட்ட 18 வயதுடைய Wanys எனும் இளைஞனது சாவுக்கு நீதி கேட்டு இந்த வன்முறைகள் நேற்று இரண்டாவது நாளாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்