மார்செயில் போதைப்பொருளுக்கு எதிராக மிகப்பெரும் நடவடிக்கை! - ஜனாதிபதி நேரில் விஜயம்!

19 பங்குனி 2024 செவ்வாய் 11:57 | பார்வைகள் : 10295
மார்செயில் போதைப்பொருளுக்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் முன் அறிவிப்பில்லாத திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
அவரோடு இணைந்து உள்துறை அமைச்சர் Gérald Darmanin, உலங்கு வானூர்தி ஒன்றில் அங்கு வருகை தந்துள்ளார். நேற்று திங்கட்கிழமை மாலை முதல் மார்செயில் 700 வரையான காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக மிகப்பெரும் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை 200 காவல்துறையினர் வீதி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாரம் முழுவதும் சோதனை நடவடிக்கை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் காரணமாக கடந்தவருடம் 47 பேர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டனர். இது 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14 பேர் அதிகமாகும்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1