மகிழுந்துக்குள் இருந்து எரிந்த சடலம் மீட்பு!

18 பங்குனி 2024 திங்கள் 17:17 | பார்வைகள் : 9593
எரியூட்டப்பட்ட மகிழுந்து ஒன்றில் இருந்து ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமைக்கும் ஞாயிற்றுக்கிழமைக்கும் இடைப்பட்ட இரவில் இச்சம்பவம் Villeneuve-d'Ascq (Nord) நகரில் இடம்பெற்றுள்ளது.
நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள நிறுத்திவைக்கப்பட்டிருந்த மகிழுந்து ஒன்று தீப்பிடித்து எரிவதாக தீயணைப்பு படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர். ஆனால் அதற்குள்ளாக நிலமை கைமீறிச்சென்றுள்ளது.
எரிந்த மகிழுந்துக்குள் இருந்து ஆண் ஒருவருடைய சடலத்தை அவர்கள் மீட்டனர். அவர் 28 வயதுடையவர் எனவும், Nord மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு பின்னணியில் உள்ள குற்றச்செயல்கள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1