Paristamil Navigation Paristamil advert login

தமிழ் கட்சிகளை சந்திக்க தயாராகும் ரணில்!

 தமிழ் கட்சிகளை சந்திக்க தயாராகும் ரணில்!

18 பங்குனி 2024 திங்கள் 15:04 | பார்வைகள் : 7735


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு நாளை மறுதினம் வரை பிற்போடப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன்  தெரிவித்தார்.

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்டமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் தீர்மானித்திருந்தனர்.

இதற்கமைய, இன்றைய தினத்தில் அது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரியிருந்த நிலையில், ஜனாதிபதி செயலகத்தில் அதற்கான நேரம் வழங்கப்பட்டிருக்கவில்லை.

இந்தநிலையில், நாளை மறுதினம் முற்பகல் 11.30க்கு குறித்த கலந்துரையாடலை நடத்துவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன்   குறிப்பிட்டார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்