சோமாலிய கடற்கொள்ளையர்கள் 35 பேரை கைது செய்தது இந்திய கடற்படை
18 பங்குனி 2024 திங்கள் 11:13 | பார்வைகள் : 7709
அரபிக்கடலில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட இந்திய கடற்படை, சோமாலிய கடற்கொள்ளையர்கள் 35 பேரை கைது செய்தது.
மத்திய கிழக்கு நாடான ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள், செங்கடல் பகுதியில் ஹமாஸ் குழுவுக்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களை தாக்கி வருகின்றனர். அதேசமயம், சோமாலிய கடற்கொள்ளையர்களும் அவ்வழியாக செல்லும் கப்பல்களை கடத்துவதை வழக்கமாக செய்து வருகின்றனர். இது கடல்சார் வணிகத்தை மேற்கொள்ளும் நாடுகளுக்கு கவலையளித்து வருகிறது.
கடந்த டிசம்பரில், அந்த வழியாக சென்ற மால்டா நாட்டு எம்.வி.ரூயென் என்ற சரக்கு கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள், அதில் இருந்த மாலுமிகளை விடுவித்துவிட்டு, அந்த கப்பலை கடத்தலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். சோமாலியா கடற்பகுதியில் வரும் கப்பல்களை, இந்த கப்பலை வைத்து மடக்கி கடத்தல், பணம் பறித்தல் போன்ற சமூக விரோத செயல்களில் கொள்ளையர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சோமாலியாவின் செங்கடல் பகுதியில் நேற்று சென்றிருந்த கொள்ளையர்களின் ரூயென் கப்பல், இந்திய கடற்படையின் போர்க்கப்பலால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதேசமயம், வானில் பறந்த கடற்படை ஹெலிகாப்டர் வாயிலாக கடற்கொள்ளையர்களுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டது.
இந்நிலையில், அரபிக்கடலில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட இந்திய கடற்படை, சோமாலிய கடற்கொள்ளையர்கள் 35 பேரை கைது செய்தது. அவர்களிடம் பிணைக்கைதிகளாக சிக்கியிருந்த கப்பல் ஊழியர்கள் 17 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan