கனடாவில் வினோத சம்பவம்...
17 பங்குனி 2024 ஞாயிறு 12:36 | பார்வைகள் : 12489
கனடாவில் நபர் ஒருவர் உயிரிழந்து விட்டதாக அவருக்கே கடிதம் அனுப்பி வைக்கப்பட்ட வினோத சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மொன்றியாலைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு இறந்து விட்டதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிக் பெட்ரோயூரஸ் என்ற நபர் கொஸ்டாரிக்காவிற்கு விடுமுறைக்காக சென்றிருந்த நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டில் அதிக வேகமாக வாகனத்தைச் செலுத்தியதாக தமக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தாம் உயிரிழந்து விட்டதாக அறிவித்து அபராதத் தொகையை செலுத்துமாறு அனுப்பி வைக்கப்பட்ட கடிததத்தை தாமே வாசிக்க நேரிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த கடிதத்தை தாயார் பார்த்திருந்தால் அதிர்ச்சியடைந்திருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோயூரஸ் தற்பொழுது தாம் உயிருடன் இருப்பதனை கூடிய விரைவில் நிரூபிக்க வேண்டுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஏனெனில் அவ்வாறு செய்யத் தவறினால் அவரது அனைத்து விடயங்களையும் அது பாதிக்கும் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இது ஒர் மனிதத் தவறாக இருக்கலாம் என நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan