GOAT படத்தில் இணைகிறாரா திரிஷா…?

14 பங்குனி 2024 வியாழன் 08:30 | பார்வைகள் : 9804
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest Of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.
இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. அங்கு விஜய் நடிக்கும் ஆக்ஷன் காட்சி படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஒரு முக்கியமானக் காட்சியைப் படமாக்க ரஷ்யா செல்ல உள்ளது படக்குழு.
இந்நிலையில் இந்த படத்தில் த்ரிஷா ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும், அவர் விஜய்யுடன் இணைந்து ஒரு பாடலில் நடனமாட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு விஜய்யும் த்ரிஷாவும் லியோ படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1