ஏவப்பட்ட சில நொடிகளில் வெடித்த ஜப்பானின் முதல் தனியார் செயற்கைக்கோள்....
13 பங்குனி 2024 புதன் 11:41 | பார்வைகள் : 5095
வணிக ரீதியாக விண்வெளியில் பரிசோதனை செய்யும் ஜப்பானின் முயற்சி ஆரம்பத்திலேயே பின்னடைவைச் சந்தித்தது.
இன்று காலை விண்ணில் ஏவப்பட்ட முதல் தனியார் ரொக்கெட், ஏவப்பட்ட சில நொடிகளில் வெடித்து சிதறியது.
Tokyo-வைச் சேர்ந்த Space One நிறுவனம் தயாரித்த Kairos Rocket, சிறிய அளவிலான அரசு சோதனை செயற்கைக்கோளை சுமந்துகொண்டு விண்ணில் பறந்தது.
ஆனால், 60 அடி நீளமுள்ள இந்த ரொக்கெட் வானத்தில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. இதனால் கடும் புகை மற்றும் தீ பரவியது.
மேற்கு ஜப்பானில் உள்ள Wakayama மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த வெடிவிபத்தால் ஏவுதளத்தின் பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்தது.
ஏவுதல் வெற்றி பெற்றிருந்தால், நாட்டிலேயே செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை ஸ்பேஸ் ஒன் பெற்றிருக்கும்.
இந்த ரொக்கெட் காற்றில் வெடித்து சிதறும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan