100,000 அகதிகளை வரவேற்றுள்ள பிரான்ஸ்!

12 பங்குனி 2024 செவ்வாய் 18:13 | பார்வைகள் : 12461
இரஷ்ய-உக்ரேன் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 100,000 உக்ரேனிய அகதிகள் பிரான்சுக்குள் வரவேற்கப்பட்டுள்ளதாக பிரதமர் கேப்ரியல் அத்தால் தெரிவித்தார்.
இன்று மார்ச் 12 ஆம் திகதி பிரெஞ்சு பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட பிரதமர் கேப்ரியல் அத்தால், கேள்வி நேரத்தின் போது இதனை தெரிவித்தார். இரஷ்ய-உக்ரேன் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 100,000 உக்ரேனிய அகதிகள் பிரான்சில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும், 18,000 மாணவர்கள் பிரான்சில் கல்வி செயற்பாடுகளை தொடர்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
2022-2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரான்ஸ் உக்ரேனுக்கு 3.8 பில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள உதவிகளை (பணம், ஆயுதம், உணவு) வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
” இந்த உதவிகளை நாம் காலவரையற்று தொடருவோம்” எனவும் அவர் தெரிவித்தார். விரைவில் 150 ட்ரோன் கருவிகளும், 6 புதிய சீசர் கனன்களும் உக்ரேனுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1