காவல்நிலையத்தில் வைத்து யூத பெண் மீது தாக்குதல் - காவல்துறையினர் மீது வழக்கு பதிவு
6 மாசி 2024 செவ்வாய் 15:14 | பார்வைகள் : 9604
யூத பெண் ஒருவரை தரையில் விழுத்தி அவரை மடக்கிப் பிடித்து, அவரது ‘விக்’ (போலி தலைமுடி)’யினை இழுத்து தாக்கப்பட்டுள்ளார்.
67 வயதுடைய யூத பெண்மணி ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். Créteil நகர காவல்நிலையத்தில் இச்சம்பவம் சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாக பிரான்சின் புலனாய்வு பத்திரிகையான Mediapart தகவல் வெளியிட்டுள்ளது. அதனுடன் காணொளி ஒன்றும் வெளியிட்டது. மேற்படி தாக்குதல் சம்பவம் காணொளியில் பதிவாகியுள்ளது.
கடந்த ஜூன் 8 ஆம் திகதி அன்று குறித்த பெண், வீதி சமிக்ஞையினை மீறியும், காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறியும் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டிருந்தார். கைகளில் விலங்கிட்டு Créteil காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டிருந்த அவர் அங்கு வைத்தே தாக்கப்பட்டிருந்தார்.
அவரது தலையில் இருக்கும் விக் காவல்துறையினரால் நகைப்புக்கு உள்ளானதாகவும், அதனை பிடுங்கி எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை அடுத்து அப்பெண் காவல்துறையினர் மீது புகாரளித்துள்ளார். அரச வழக்கறிஞர் அலுவலகம் வழக்கு பதிவு செய்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan