Paristamil Navigation Paristamil advert login

விஜய்யின் G.O.A.T படம் பற்றி அப்டேட் கொடுத்த யுவன்சங்கர் ராஜா

விஜய்யின் G.O.A.T படம் பற்றி அப்டேட் கொடுத்த யுவன்சங்கர் ராஜா

6 மாசி 2024 செவ்வாய் 14:31 | பார்வைகள் : 6697


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர்,வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்து வரும் படம்  G.O.A.T. இப்படத்தில் விஜயுடன் இணைந்து, பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்
இப்படத்தின் முதல்லுக் போஸ்டர் இரண்டாவது லுக் போஸ்டர்கள் வெளியான நிலையில்,  நேற்று G.O.A.T பட ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் தன் ரசிகர்களுடன் செல்பி மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ வைரலானது.

இந்த நிலையில், இப்படத்தின் அப்டேட்டை இசையமைப்பாளர்  யுவன்சங்கர் ராஜா கொடுத்துள்ளார். அதில்,  படத்திற்கு மிகவும் எதிர்பார்க்கிறேன். பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. படக்குழுவினரும் உற்சாகத்துடன் உள்ளனர். இம்முறை இனிமேல் பேச்சு கிடையாது. வீச்சுதான் என்பதில் தெளிவாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்