பரிசில் இருந்து 46 அகதிகள் வெளியேற்றம்!!

6 மாசி 2024 செவ்வாய் 14:08 | பார்வைகள் : 10279
பரிசில் சுகாதாரமற்ற முறையில் கூடாரங்களில் தங்கியிருந்த 46 அகதிகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை வெளியேற்றப்பட்டனர்.
13 ஆம் வட்டாரத்தின் Gare de Lyon மற்றும் Gare d'Austerlitz நிலையங்களை இணைக்கும்
Charles-de-Gaulle மேம்பாலத்தின் கீழே தங்கியிருந்த அகதிகளே இன்று பெப்ரவரி 6, செவ்வாய்க்கிழமை வெளியேற்றப்பட்டனர். காலை 7 மணி அளவில் அங்கு சென்றிருந்த காவல்துறையினர் அகதிகளை மீட்டு, பேருந்துகளில் ஏற்றி வெவ்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனர்.
மூன்று பேருந்துகளில் ஏற்றப்பட்ட அவர்கள் Angers, Strasbourg, Orléans ஆகிய மூன்று நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அகதிகளுக்கான போதிய வசதிகள் செய்துகொடுப்பது அரசின் நோக்கமல்ல.. மாறாக ஒலிம்பிக் போட்டிகளை கருத்தில் கொண்டு அகதிகளை வெளியேற்றி அழகுபடுத்தும் வேலையில் அரசு ஈடுபடுவதாக அகதிகள் நலன் அமைப்பு Accès au Droit collective குற்றம்சாட்டியுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1