Paristamil Navigation Paristamil advert login

ஹமாஸ் தலைவர்கள் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்க தயாராகும் கனடா

ஹமாஸ் தலைவர்கள் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்க தயாராகும் கனடா

6 மாசி 2024 செவ்வாய் 10:25 | பார்வைகள் : 11579


இஸ்ரேல் காசா பிரதேசத்தின் மீது தாக்குதலை நடத்தி வரும் நிலையில் வெளிநாடுகளில் வாழும் இஸ்ரேலர்கள் மீது தாக்குதல்களை நடத்தி வரவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 இந்நிலையில் மேற்குக் கரையில் வன்முறையைத் தூண்டும் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் மீது கனடா பொருளாதாரத் தடைகளை விதிக்கவுள்ளது.

கலவரத்தைத் தூண்டுதல், தீ வைத்தல், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துதல், சேதம் விளைவித்தல், உள்ளிட்ட வன்முறை செயல்களில் நேரடியாக ஈடுபட்டதாக மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் 4 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்க அதிபர் பைடன் அவர்கள் மீது பொருளாதாரத் தடை விதித்தார்.

மேலும் அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது அமெரிக்காவைப் போல் கனடாவும் வன்முறையில் ஈடுபடும் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள், ஹமாஸ் தலைவர்கள் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கவுள்ளதாக கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்