Paristamil Navigation Paristamil advert login

 கலிபோர்னியாவில் கடும் புயல் - நீரில் மூழ்கிய நகரங்கள்

 கலிபோர்னியாவில் கடும் புயல் - நீரில் மூழ்கிய நகரங்கள்

6 மாசி 2024 செவ்வாய் 08:17 | பார்வைகள் : 8704


அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கடும் புயல் மழையால் மின்தடை ஏற்பட்டுள்ள நிலையில்  கலிஃபோர்னியா வெள்ள நீரால் மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இது தொடர்பில் தெரியவருகையில்,

 5 முதல் 10 அங்குலங்கள் (12.7 முதல் 25.4 சென்டிமீட்டர்) வரை மழை பெய்துள்ளதாகவும், மேலும் கடும்மழை எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது.

கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் புயலின் போது ஏற்பட்ட மண் சரிவில் இருந்து ஒரு தீயணைப்பு வீரர் மண் மற்றும் பாறைகளில் நடந்து செல்கிறார்.

முதலில் வடக்கு கலிபோர்னியாவை தாக்கிய புயலுக்கு மூன்று பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது உயிரிழந்தவர்களை மீட்பதற்கான மீட்புப் பணிகள் நடந்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்