அகதி சுட்டுக்கொலை!

5 மாசி 2024 திங்கள் 09:23 | பார்வைகள் : 9411
A16நெடுஞ்சாலையில் வைத்து அகதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் Dunkerque மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
பெப்ரவரி 3, சனிக்கிழமை இரவு இச்சம்பவம் Loon-Plage (Nord) பகுதியில் குறித்த நெடுஞ்சாலையை அண்மித்துள்ள அகதிகள் முகாமுக்கு அருகே துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. குறித்த முகாமில் வசிக்கும் அகதி ஒருவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டபோது குறித்த அகதி காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
மேற்குறித்த அகதிமுகாமில் 500 தொடக்கம் 600 வரையான அகதிகள் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1