கனடாவில் வீடு கொள்வனவு செய்ய காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு முக்கிய தகவல்

5 மாசி 2024 திங்கள் 09:13 | பார்வைகள் : 7620
கனடாவில் வீடு கொள்வனவு தொடர்பில் பல நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெளிநாட்டவர்கள் கனடாவில் வீடு கொள்வனவு செய்வதற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் கனடாவில் வீடுகள் கொள்வனவு செய்வதற்கான தடை மேலும் இரண்டாண்டுகளுக்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் நிதி அமைச்சர் கிறிஸ்டியா பீரிலாண்ட் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2027ம் ஆண்டு வரையில் வெளிநாட்டவர்கள் கனடாவில் வீடுகள் கொள்வனவு செய்வதற்கான தடை நீடிக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.
வெளிநாட்டு பிரஜைகள், நிறுவனங்கள் கனடாவில் வதிவதற்காக வீடுகள் கொள்வனவு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனேடிய மக்களுக்கு மலிவு விலையில் வீடுகளை கொள்வனவு செய்யக் கூடிய சூழ்நிலையை உருவாக்கும் நோக்கில் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்காலிக தொழில் அனுமதிகள், ஏதிலிக் கோரிக்கையாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினர் சில நிபந்தனைகளின் அடிப்படையில் வீடு கொள்வனவு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1