கேப்ரியல் அத்தால் எதிர்கொள்ளும் முதலாவது நம்பிக்கை இல்லா பிரேரணை??!

5 மாசி 2024 திங்கள் 09:00 | பார்வைகள் : 10493
பிரதமர் கேப்ரியல் அத்தால் இன்று திங்கட்கிழமை தனது முதலாவது நம்பிக்கை இல்லா பிரேரணையை (motion de censure) எதிர்கொள்ளப்போகிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் கேப்ரியல் அத்தால் அரசியின் பொது கொள்களை (déclaration de politique générale) அறிவித்தார். அதற்கு எதிராகவே நம்பிக்கை இல்லா பிரேரணையை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தனர். அதையடுத்து இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெற உள்ளது.
கேப்ரியல் அத்தால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன நிலையில், அவர் சந்திக்க உள்ள முதலாவது நம்பிக்கை இல்லா பிரேரணை இதுவாகும். மக்ரோனின் அரசாங்கத்தில் பிரதமராக இருந்த Elisabeth Borne கிட்டத்தட்ட 30 நம்பிக்கை இல்லா பிரேரணைகளைச் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1