விஜய்யின் கடைசிப் படம் எது?
5 மாசி 2024 திங்கள் 04:26 | பார்வைகள் : 8030
தளபதி விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை சமீபத்தில் தொடங்கிய நிலையில் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏற்கனவே ஒரு படம் கமிட் ஆகி இருப்பதை அடுத்து அந்த ஒரு படத்தை முடித்துவிட்டு முழுமையாக அரசியலுக்கு வருவேன் என்று கூறியுள்ளார்.
இதனை அடுத்து ’தளபதி 69’ படம் தான் விஜய்யின் கடைசி படம் என்று அவரது ரசிகர்கள் ஒரு பக்கம் அதிருப்தியில் இருந்தாலும், இன்னொரு பக்கம் தங்களது அபிமானத்திற்குரிய நடிகர், அரசியல் கட்சி தலைவர் ஆகிவிட்டார் என்பதில் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’தலைவர் 171’ படத்தை இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் ’விக்ரம் 2’ மற்றும் ’கைதி 2’ ஆகிய படங்களை இயக்க இருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் விஜய்யை வைத்து அவர் ’லியோ’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போதே ’விக்ரம் 2’ மற்றும் ’கைதி 2’ படங்களில் விஜய் சிறப்பு காட்சிகளில் தோன்றும், அதாவது ’எல்சியு’ காட்சிகளில் தோன்றும் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து விட்டதாகவும் அந்த காட்சிகளுக்கான டப்பிங் பணியையும் விஜய் முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
எனவே ’தளபதி 69’ படத்திற்கு பின்னர் ’விக்ரம் 2’ மற்றும் ’கைதி 2’ஆகிய இரண்டு படங்களில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்த காட்சிகள் வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan