இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கும் முறை நிறுத்தம்!
30 ஆடி 2023 ஞாயிறு 09:55 | பார்வைகள் : 8137
அதிக செலவு ஏற்படுவதன் காரணமாக இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஒரு இலத்திரனியல் கடவுச்சீட்டை தயாரிப்பதற்கு 20 அமெரிக்க டொலர்கள் செலவாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடாந்தம் குறைந்தது 750,000 கடவுச்சீட்டுகள் வழங்கப்படுவதாகவும் அமைச்சு கூறுகிறது. அதற்குத் தேவையான தொகை 15 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இதன் காரணமாக இலத்திரனியல் கடவுச்சீட்டு முறை மீள ஆரம்பமாகும் வரை சாதாரண கடவுச் சீட்டை அச்சிட்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan