Paristamil Navigation Paristamil advert login

சிலி நாட்டில் பாரிய  காட்டுத்தீ - 10 பேர் பலி

சிலி நாட்டில் பாரிய  காட்டுத்தீ - 10 பேர் பலி

4 மாசி 2024 ஞாயிறு 07:19 | பார்வைகள் : 10359

 அமெரிக்காவில் உள்ள சிலி மற்றும் மத்திய சிலி ஆகிய பகுதிகளில் இருக்கும் வனப்பகுதிகள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இந்த தீ விபத்தால் அங்கு இருந்த 1,000 வீடுகளுக்கு மேல் எரிந்து சேதமடைந்துள்ளன.

இந்த விபத்தில்இதுவரை 10 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

இந்த தீ விபத்து தொடர்பாக   பொலிஸார்  மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையின தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தீ பரவுவதை தடுக்கும் வகையில், விமானங்களின் உதவியுடனும் தண்ணீர் எடுத்துவரப்பட்டு தீ அணைக்கப்பட்டு வருகிறது.

திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும், தீ பரவ வாய்ப்புள்ள இடங்களில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டும் வருகிறனர். 

வர்த்தக‌ விளம்பரங்கள்