பரிஸ் : கனரக வாகனத்தில் மோதி மிதிவண்டி சாரதி பலி!
30 தை 2024 செவ்வாய் 17:19 | பார்வைகள் : 16029
கனரக வாகனம் ஒன்றில் மோதி மிதிவண்டி சாரதி ஒருவர் பலியாகியுள்ளார். தலைநகர் பரிசில் இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
16 ஆம் வட்டாரத்தில் உள்ள Cours de la Reine மற்றும் Avenue Franklin D. Roosevelt வீதிகள் இணையும் முனையில் இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றது. மிதிவண்டியில் பயணித்த ஒருவரை கனரக வாகனம் மோதித்தள்ளியுள்ளது. இச்சம்பவத்தில் 30 வயதுடைய குறித்த மிதிவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
கனரக வாகனத்தின் சாரதி மதுபாவனை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதில் அவர் விபத்தின் போது மது உட்கொண்டிருக்கவில்லை என யெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan